வியாழன், 14 அக்டோபர், 2010

சுரங்கத்தில் சிக்கியிருந்த 33 பேரும் மீட்பு

22 மணிநேர மீட்பு முயற்சிகளின் மூலம் சிலி நாட்டில் சுரங்கத்தில் சிக்கியிருந்த 33 பேரும் நாசவின் உதவியுடனும் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 69 நாட்களாக இவர்கள் சுரங்கத்தில் சிக்கித் தவித்தமை குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளே இந்த மீட்பு நடவடிக்கையினை ஊடகத்தின் மூலம் நேரடியாக கண்டனர்.

மீட்கப்பட்டவர்கள் எவ்வித உடல் நல பாதிப்புமின்றி இருப்பதாக சிலி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜெமி மனாலிச் தெரிவித்ததுள்ளார்.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அருகே இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் மீட்கப்படுவதை நேரடியாக ஒளிபரப்பும் நோக்கில் ஏராளமான தொலைக்காட்சி செய்தியாளர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.