வியாழன், 14 அக்டோபர், 2010

தண்டனையை ரத்து செய்யக்கோரி சரத் பொன்சேகா மேன்முறையீடு

இரண்டாவது இராணுவ நீதிமன்றின் ஊடாக தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ரத்து செய்யுமாறுக் கோரி சரத் பொன்சேகாவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனக்கு 30 மாத கால சிறை தண்டனை விதித்தபோது நீதிபதிகள் முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லையென தனது மனுவினூடாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக ரத்து செய்யுமாறு சரத் பொன்சேகா மனுவில் கூறியுள்ளார்.

இராணுவத் தளபதி, இரண்டாம் இராணுவ நீதிமன்றில் நீதிபதிகளாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.