வியாழன், 14 அக்டோபர், 2010

குவைத்தில் துன்புறும் இலங்கை வீட்டுப் பணிப் பெண்கள்

தன்னை அடித்து அறையில் வைத்து பூட்டி பயமுருத்தியாதாக கூறிய குவைத் நாட்டில் பணிபுரிந்த இலங்கையை சேர்ந்த வீட்டுப்பணிப் பெண் குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் தன்னை அறையில் வைத் பூட்டியதும் தான் ஜன்னலின் வழியாக துணி யொன்றினை கட்டி 2 ஆவது மாடியிலிருந்து கீழ் இறங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறிப்பிட்ட லதா என்னும் பெண்ணின் நிலைமை போல தெற்காசியாவில் பல பெண்களின் நிலைமை இருப்பது குறிப்பிடத்தக்கது. பாதிப்புக்குள்ளாகும் ஊழியர்கள் தப்பிக்க முயற்சிக்கும் போது துன்புறுத்தப்படுகிறார்கள்.

மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் கணிப்பின் படி இவ்வாறு தப்பிக்க முயன்று பாதிப்புக்குள்ளாகுவோரை குவைத் பொலிஸார் தற்கொலைக்கு முயற்சி செய்தனர் என பதிவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.