கண்டிப் பிரதான வீதிகளில் குப்பை கொட்டிய 596 பேருக்கு எதிராக கண்டிப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதில் 379 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இவ்வழக்குகள் சூழல் மாசுபடல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இவ்வழக்குகள் மூலம் ரூபா 18.5 லட்சம் தண்டப்பணம் பெறப்பட்டுள்ளது என கண்டிப் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் கஸ்தூரியாராட்சி தெரிவித்தார்.
ஏனையோருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இனிமேல் பொலிஸாரால் குப்பை கொட்டுபவர்கள் பற்றி கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
