வியாழன், 14 அக்டோபர், 2010

புகலிடம் கோருபவர்கள் பொருளாதார வசதியுடையவர்கள்

படகுகள் மூலம் சட்டவிரோதமாக கனடாவினை அடைந்து அங்கு புகலிடம் கோருபவர்கள் பொருளாதார வசதியுடைய குடியேற்றவாசிகள் எனவும் பயம் கொண்ட அகதிகள் இல்லையெனவும், இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களது விண்ணப்பங்களில் எவையுமே அடிப்படை சட்டபூர்வமானது அல்ல எனவும் குறப்பிட்டுள்ளதுடன், அவர்கள் அச்சத்தினால் புகலிடம் கோரவில்லை எனவும் பணத்திற்காக தான் கோருகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.