வியாழன், 14 அக்டோபர், 2010

சேனைக்குடியிருப்பில் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று காலை கிட்டங்கி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் துறைநீலாவணையை சேர்ந்தவரும் சேனைக்குடியிருப்பில் வசிப்பவருமான கோவிந்தபிள்ளை குணசேகரம் (50வயது) என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்க்கப்பட்ட சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்தாரா என்பது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.