மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று புகழ்மிக்க சக்தி தலங்களில் ஒன்றான பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்திவிழா நேற்றைய தினம் இடம்பெற்ற தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த சனிக்கிழமை கதவுதிறத்தலுடன் ஆரம்பமான சக்தி விழாவானது ஐந்து தினங்கள் வெகு சிறப்பாக இடம்பெற்றது. நேற்று முன் தினம் செவ்வாய்க்கிமை நோற்புக்கட்டுதல் மற்றும் கடல் குளிப்பு வைபவம் இடம்பெற்றதுடன் நேற்று புதன்கிழமை காலை தீமிதிப்பு உற்சவம் வெகுசிறப்பாக இடம்பெற்றது.இந்த தீமிதிப்பு உற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தமது நேர்த்திகளை செலுத்தினர்.
