வியாழன், 14 அக்டோபர், 2010

பெட்ரிகா ஜேன்ஸிடம் குறுக்கு விசாரணை

சரத் பொன்சேகா மீதான வௌ்ளைக் கொடி வழக்கில் இன்றைய தினம், ஊடகவியளாளர் பெட்ரிகா ஜேன்ஸிடம் சரத் பொன்சேகாவின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணைகள் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் சன்டே லீடர் பத்திரிகை சார்பில் லால் விக்ரமதுங்கவினையும் மன்றில் ஆஜராகுமாறு, திருமதி.தீபாலி ஜயசுந்தர தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உத்தரவிட்டிருக்கிறது.

இந்நிலையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை சட்டவிரோதமாதெனக் கோரி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தனது சட்டத்தரணி ஊடாக சரத் பொன்சேகா நேற்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.