பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்குள் அனைத்து பல்கலைக்கழ மாணவர் சங்கம் பலவந்தமாகச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நுழைவாயிலை உடைத்துக் கொண்டு அவர்கள் உற்சென்றுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் மற்றும் ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள் பொய் குற்றச்சாட்டின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும், இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை மேற்கொண்டதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.
உயர்கல்வி அமைச்சர் இந்த மாணவர்களை பலிவாங்குவதை நோக்காகக் கொண்டு மாணவர்களை சிறை வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்திலிருந்து வெளியேறப் போவதில்லையென உதுல் பிரேமரட்ன கூறியுள்ளார்.
